வங்காளதேசம்: போராட்டத்தை தூண்டியதாக கைது… வங்காளதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்கான் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
வங்காளதேசத்தில் சிறுபான்மையரான இந்துக்களின் போராட்டங்களைத் தூண்டியதாக இஸ்கான் அமைப்பின் தலைவர் சிமோய் பிரபுவை போலீசார் டாக்கா விமான நிலையத்தில் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை ரங்கபுரில் பிரம்மாண்டமான கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது அவர் கைது செய்யப்பட்டார். டாக்காவில் இந்துக்களின் வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் வீடுகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே வங்காள தேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் இஸ்கான் தலைவர் கைது செய்யப்பட்ட வீடியோவை தமது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்