தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 1/4 கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
துருவிய மரவள்ளிக்கிழங்கு – 1 கப்
எண்ணெய் – தேவைக்கேற்ப.
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
சோம்பு பொடி, இஞ்சி, பூண்டு விழுது – தலா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை: அரிசி, மரவள்ளிக்கிழங்கு, மிளகாய் ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், சோம்பு பொடி, இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை மாவுடன் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசையாக ஊற்றவும்.