ஃபெங்கல் புயல் வரும் 30ம் தேதி சென்னையை கடக்கும் என தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வரும் 29ம் தேதி வரை சூறாவளி புயலாக இருக்கும் என்றும், பின்னர் கரையை நெருங்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபங்கல் சூறாவளியின் பாதை:
இந்த புயல் சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொள்ளும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஃபெங்கல் புயல் வரும் 30ம் தேதி சென்னை மற்றும் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு:
இந்நிலையில், சென்னையில் வரும் 27ம் தேதி லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும், 28ம் தேதி மிதமான மழை நீடிக்கும். மேற்கு நோக்கி நகரும் புயல் காரணமாக சென்னையில் வரும் 29-ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு:
புயல் கரையை கடந்ததும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கொங்கு மண்டலங்களை கடந்ததும் இப்பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையை மழைக்கு தயார்படுத்த வேண்டும் என்றும், வரும் 30ம் தேதி மிக கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.