அரக்கோணம்: மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையை அடுத்து கடலூருக்கு தேசியப் பேரிடர் மீட்புக் குழு மூலம் இன்று முதல் மீட்புப் பணி ஆரம்பம் ஆகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மழை பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் கடலூருக்கு வந்தனர்.
சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரும் இரவு 8 மணி அளவில் கடலூர் வந்தடைந்தனர்.
கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.. இன்று மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.