தஞ்சாவூர்: தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மதிய உணவு மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டன.
தமிழக ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினத்தை ஒட்டி வடக்கு மாவட்ட தலைவர் கோ.செல்வம் தலைமையில் மேம்பாலம் பகுதியில் இயங்கி வரும் அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து அப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பணியுரியும் பணியாளர்களுக்கு துண்டுகள் மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டன. இதில் தமிழக ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள், மாணவர்கள், உணவு, ஊராட்சி செயலாளர்கள், ஆடைகள்