புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
காந்தி வீதி பாரதிதாசன் கல்லூரி அருகே இருந்த பெரிய மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுந்த மரங்களை பொதுப்பணித் துறையினரும், நகராட்சி மற்றும் தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.