சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன், இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷை எதிர்த்து விளையாடுகிறார். 14 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் டிங் லிரன் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
2-வது சுற்று டிராவில் முடிந்தது. 3-வது சுற்றில் வெற்றி பெற்று குகேஷ் பதிலடி கொடுத்தார். அதன்பின் 4-வது சுற்று டிராவில் முடிந்தது. இந்நிலையில் நேற்று நடந்த 5-வது சுற்றில் டிங் லிரனும், குகேஷும் மோதினர். டிங் லிரன் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் விளையாடினர். 40-வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
5 சுற்றுகள் முடிவில் இரு வீரர்களும் தலா 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.