சென்னை: ”தமிழக சட்டசபை கூட்டத்தொடர் டிச., 9, 10-ல் நடக்கிறது. மதுரையில் டங்ஸ்டன் கனிமங்களை வெட்டி எடுக்கும் மத்திய அரசின் உரிமையை ரத்து செய்ய, முதல் நாளே, தமிழக முதல்வர், சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வர உள்ளார். மாநில அரசின் அனுமதி பெறாமல் மாவட்ட நிர்வாகம்,” என, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது, “சட்டப் பேரவைத் தலைவர் அறையில் இன்று அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு, டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என ஒருமனதாக உறுதி செய்தனர்.
முதல் நாளான டிசம்பர் 9-ம் தேதி தமிழக நிதியமைச்சர் கூடுதல் செலவுக்கான கோரிக்கையை முன்வைப்பார். அன்றைய தினம், தமிழக அரசின் அனுமதி பெறாமல், மத்திய அரசு அனுமதி வழங்கிய மதுரை மாவட்டத்தில், டங்ஸ்டன் கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமையை ரத்து செய்ய, தமிழக முதல்வர், சட்டப் பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருவார்.
இரண்டாவது நாளான டிசம்பர் 10-ம் தேதி விவாதங்கள் நடத்தப்பட்டு பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும். கூடுதல் செலவுக்கான கோரிக்கையும் வைக்கப்படும். இரண்டு நாட்களும் கேள்வி நேரம் இருக்கும்,” என்றார்.