நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் 80 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
“கூடலூர், கோடநாடு, மேல் பவானி பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது, ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சேதம் ஏற்பட்டால், அதை சீரமைக்கும் பணியில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆபத்தான பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் மக்கள் முகாம்களில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் வர தடை இல்லை; கனமழை தொடரும் பட்சத்தில் அவர்கள் பாதுகாப்பாக பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தனியு தெரிவித்துள்ளார்.