விழுப்புரம்: அமைச்சர் மீது சேறு வீச்சு… விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி மீது இளைஞர் ஒருவர் சேறு வீசியதாக கூறப்படுகிறது.
மழை விட்ட பிறகும் தங்கள் பகுதிக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என அப்பகுதியினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட போது அவ்வழியாக காரில் சென்ற அமைச்சர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது காருக்குள் அமர்ந்தபடியே பேசியதால் அமைச்சர் மீது சேறு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சருடன் இருந்த அவரது மகன் கௌதமசிகாமணி, மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் போலீஸார் மீதும் சேறு பட்டதாக கூறப்படுகிறது.