By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறினார்..!!
    1 Min Read
    மாணவர்களைப் பாதிக்கும் அமெரிக்க விசா கட்டுப்பாடுகள் ..!!
    2 Min Read
    வர்த்தக நீதிமன்றத்தின் தடை டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவு..!!
    1 Min Read
    இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்
    1 Min Read
    ‘டிரம்ப் தனது அதிகாரத்தை மீறுகிறார்’ – அமெரிக்க நீதிமன்றம் சாடல்..!!
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    AI மற்றும் இந்தியக் கல்வி: ஒரு புதிய யுகத்தின் தொடக்கம்
    2 Min Read
    கவிதா புதிய கட்சி தொடங்கும் சூழல் – பாரத ராஷ்டிர சமிதியில் கிளம்பிய பதற்றம்
    2 Min Read
    இன்று தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு..!!
    2 Min Read
    பிரதமர் மோடியை சசி தரூர் புகழ்ந்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
    1 Min Read
    பாகிஸ்தான் பொய்யான பிரச்சாரத்தை பரப்புகிறது: ஒவைசி குற்றச்சாட்டு..!!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    குற்றால அருவிகளில் 6-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!!
    1 Min Read
    புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தம்.. நன்றி தெரிவித்த சு. வெங்கடேசன் எம்.பி
    2 Min Read
    ராகிங்கைத் தடுப்பதற்கான செயல் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்..!!
    1 Min Read
    தொல்லியல் ஆய்வுத்துறை கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து விளக்கம்..!!
    2 Min Read
    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேருவதற்கு பின்பற்ற வேண்டிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேருவதற்கு பின்பற்ற வேண்டிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு..!!
தமிழகம்

இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேருவதற்கு பின்பற்ற வேண்டிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு..!!

Periyasamy
Last updated: December 7, 2024 8:12 am
By Periyasamy 2 Min Read
Share
SHARE

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேருவதற்கு பின்பற்ற வேண்டிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- உயர்கல்வி நிறுவனங்கள் ஜூலை/ஆகஸ்ட் மற்றும் ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை நடத்தலாம். உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அந்தந்தப் படிப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்கல்வி நிறுவனமே தீர்மானிக்க முடியும்.

உயர்கல்வி, தொழிற்கல்வி, பயிற்சி, திறன் மேம்பாடு, இன்டர்ன்ஷிப் அனைத்தையும் ஒட்டுமொத்த பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்க முடியும். மாணவர்கள் விரும்பினால் படிப்பை நிறுத்திவிட்டு தொடர வாய்ப்பளிக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் சேர, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ் 2வில், அறிவியல், கணிதம், வணிகம் போன்ற பாடங்களை தேர்வு செய்திருந்தாலும், விரும்பும் இளங்கலை பட்டப்படிப்பில் சேரலாம். இதற்கு தேசிய அளவில் அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். உயர்கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை நேரடியாக இரண்டாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேர்க்கலாம், நிறுவனங்களில் போதுமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் இருந்தால் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு இளங்கலை படிப்புகள் மற்றும் இரண்டு முதுகலை படிப்புகள் படிக்கலாம்.

தன்னாட்சி அமைப்புகளின் ஒப்புதலுடன் மாணவர்களின் குறைந்தபட்ச வருகைத் தேவையை உயர்கல்வி நிறுவனங்கள் தீர்மானிக்கலாம். இளங்கலைப் படிப்புகளின் காலம் 3 அல்லது 4 வருடங்களாகவும், முதுகலை படிப்புகளின் காலம் 1 அல்லது 2 வருடங்களாகவும் இருக்கும். 4 வருட இளங்கலைப் படிப்பை முடிப்பவர்கள் ஒரு வருட முதுநிலைப் படிப்பில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து அம்சங்களும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை. மாநில நடைமுறைப்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, அதாவது ஜூன் மாதத்தில் நடைபெறும். மேலும், இளங்கலைப் படிப்பின் காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. அதேபோல, பிளஸ் 2வில் படித்த படிப்பைப் பொறுத்து, பட்டப் படிப்பைத் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

குற்றால அருவிகளில் 6-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!!

புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தம்.. நன்றி தெரிவித்த சு. வெங்கடேசன் எம்.பி

ராகிங்கைத் தடுப்பதற்கான செயல் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்..!!

தொல்லியல் ஆய்வுத்துறை கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து விளக்கம்..!!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

TAGGED:2 degreesGovernmentguidelinesகல்விக் கொள்கைவழிகாட்டுதல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தொழில்நுட்பம்

சூசுகியின் முதல் மின்சார ஸ்கூட்டர் ‘இ-ஆக்சஸ்’ ஜூனில் அறிமுகம் – இந்திய சந்தையில் புதிய மாற்றம்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?