தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
நண்டு – 3/4 கிலோ
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அதன்பின் கழுவி வைத்துள்ள நண்டை சேர்த்து நன்கு கிளறி விட்டு, நண்டு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து, மூடியைத் திறந்து மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான நண்டு வறுவல் தயார்.