கராச்சி: இண்டிகோ விமானம் 6E63 நேற்று தலைநகர் டெல்லியில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு புறப்பட்டது. விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, ஒரு ஆண் பயணிக்கு கடுமையான உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு விமானத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் 6E63 தரையிறக்கப்பட்டது.
அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கராச்சியில் இருந்து டெல்லி திரும்பியது. வந்தவுடன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆண் பயணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.