சென்னை: அமித்ஷா பேசியது கண்டனத்திற்கு உரியது என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்நிலையில் ‘விடுதலை-2’ திரைப்படத்தைக் காண சென்னை காசி திரையரங்கிற்கு இயக்குநர் வெற்றிமாறன் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்கள் அமித் ஷா மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், அவர் பேசியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.