பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- ஒரு தொண்டர் தன்னை அழைத்து, “உன்னைக் கொல்லப் போகிறேன். என்னை ஜாமீனில் எடுத்து விடுங்கள்,” எனக்கூறி, “கட்சி உயர்ந்துள்ளது,” என்றார். திருநெல்வேலி நீதிமன்றம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலைச் சம்பவம் நடந்தது. சமூகத்தில் வன்முறையை தூண்டி அமைதியை குலைக்கும் நோக்கில் அண்ணாமலை பேசுகிறார்.
அண்ணாமலை மீது ஏற்கனவே இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டாலும், காவல் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.
அந்த வழக்கில் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தை தூண்டும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.