சென்னை: சுவையான ருசி மிகுந்த சோயா 65 செய்து பார்ப்போம் வாங்க. இதோ அதன் செய்முறை. மேலும் இது மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததும் கூட.
தேவையானவை: மீல்மேக்கர் – 1 கப்சிக்கன் 65 பவுடர் – 1 பாக்கெட்எண்ணெய் பொரிக்கமிளகாய்த்தூள் – 1/4 ஸ்பூன்எலுமிச்சை – 1/2 பழம்உப்புகார்ன்ப்ளார் மாவு – 2 ஸ்பூன்
செய்முறை:மீல்மேக்கரை வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் வடிக்கவும். மிளகாய்தூள், உப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் எலுமிச்சை பிழிந்து லேசாக தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
மசாலாவில் மீல் மேக்கர் சேர்த்து பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், ஊற வைத்த மீல்மேக்கரில் கார்ன்ப்ளார் மாவு தூவி பிசறி எண்ணெயில் போட்டு பொரிக்கவும். க்ரிஸ்ப்பியான, சுவையான சோயா 65 தயார்.