சென்னை: துண்டு பிரசுரம் கொடுத்தவர்கள் கைது… மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கிய த.வெ.க பெண் நிரவாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடரபாக விஜய் வெளியிட்ட அறிக்கையை சென்னை கோயம்பேட்டில் தனியார் மால் முன்பு துண்டு பிரசுரமாக த.வெ.க மகளிரணியினர் வழங்கினர்.
இவ்வாறு துண்டு பிரசுரம் வழங்கிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். நாங்கள் என்ன தவறு செய்தோம் என அந்த பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அனுமதியின்றி கூடியிருப்பதாகக் கூறி அவர்களை போலீஸார் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.