சென்னை: கல்லூரிகளில் தேசிய மாணவர் படையை விருப்பப் பாடமாக சேர்க்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது இளங்கலைப் படிப்பில் முக்கியப் பாடங்களுடன் கல்லூரி அல்லாத பாடங்களையும் விருப்பப் பாடங்களாகப் படிக்க வேண்டும்.
இதற்கு, கூடுதல் மதிப்பெண் ‘கிரெடிட்’ வழங்கப்படும். இந்த மதிப்பெண் மாணவர்களின் கூட்டு மதிப்பெண் பட்டியல், கிரேடு மற்றும் தரவரிசையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கான விருப்பப் பாடமாக தேசிய மாணவர் படையை (என்சிசி) பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்துள்ளது. கல்லூரிகளில் தேசிய மாணவர் படையில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த விருப்பப் படிப்பைத் தேர்ந்தெடுக்க முடியும்.
விருப்ப பாடமான கிரெடிட் ஸ்கோரையும் முக்கிய மதிப்பெண் பட்டியலில் சேர்க்கலாம்’ என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.