புதுடெல்லி: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். துணை முதல் மந்திரியாக விக்ரமர்கா மல்லு பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது துணை முதல்வரும் உடனிருந்தார். இருவரும் பிரதமர் மோடிக்கு நந்தி சிலையை பரிசாக அளித்தனர்.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. தெலுங்கானா மாநிலம் தொடர்பான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் ரேவந்த் ரெட்டி சந்தித்துப் பேசினார்.