தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 10
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
பீர்க்கங்காயின் தோல்- 1 கப்
புளி- சிறிது
கடலை பருப்பு – 50 கிராம்
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
வெங்காயம்- 1
துருவிய தேங்காய்- 2
செய்முறை: முதலில் பீர்க்கங்காயின் தோலைத் சீவி தனித்தனியாக வைக்கவும். அடுத்து, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, பீர்க்கங்காயின் தோல், உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதே பாத்திரத்தில், தேவையான அளவு எண்ணெயைச் சேர்த்து, பீர்க்கங்காயின் தோல், வெங்காயம், துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு வதக்கவும். இரண்டு கலவைகளையும் ஆறிய பிறகு, தேவையான தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். வெறும் பத்து நிமிடங்களில், சுவையான பீர்கங்காய் தோல் துவையல் தயார்.