புது டெல்லி: 2025 ஹஜ் யாத்திரைக்கான யாத்ரீகர்கள் புறப்படுவது ஏப்ரல் 29 முதல் மே 30 வரை திட்டமிடப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டு கூடுதலாக 10,000 பேரை அனுமதிக்குமாறு இந்தியா கோரியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஹஜ் யாத்திரை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று 5 நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றார்.
நாளை சவுதி அரேபிய அமைச்சர் தவ்ஃபிக் பின் பஸ்வான் அல் ரபியாவை சந்திக்கும் கிரண் ரிஜிஜு, 2025 ஹஜ் யாத்திரை குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.