சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட ரோஸ் குக்கீஸ் செய்து கொடுத்து பாருங்கள். உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள். இதை அச்சு முறுக்கு என்றும் சொல்வார்கள்.
தேவையானப் பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
மைதா – 1/4 கப்
முட்டை – 4
பொடித்த சர்க்கரை – 1/2 கப்
தேங்காய்ப்பால் – 1 கப்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
தேவையானவை: அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.
முதலில் வாணலியில் எண்ணையை விட்டு காய வைக்கவும். எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும்.
உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும்.
சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.
அது சிவப்பு நிறமாக மாறும்போது எடுத்து எண்ணெய் வடிகட்டி நீக்கவும். ஈரம் இல்லாத பாத்திரத்தில் அச்சு முறுக்கினை பாதுகாப்பாக இரண்டு மாதங்கள் வரையில் வைக்கலாம். இலேசான இனிப்புடன் கூடிய இந்த முறுக்கு “அச்சப்பம்” என்றும் “ரோஸ் குக்கி” என்றும் அழைக்கப்படுகிறது.