சென்னை: திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இளைஞர்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். சென்னையில் நடந்த பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில், சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை, தி.மு.க., அரசு சீரழித்து வருகிறது. தி.மு.க., அரசை ஆட்சியில் இருந்து அகற்ற இளைஞர்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்.
அரசியல் தலைவர் ஒருவர் நேற்று கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். திமுக அரசு மாநிலத்தை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. மாநிலத்தின் வளர்ச்சியையும், ஏழைகளின் நலனையும் மாநில அரசு விரும்பவில்லை. 2026ல் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.