மும்பை: நிதி மோசடிகளைத் தடுக்கும் வகையில், பரிவர்த்தனை நோக்கங்களுக்காக வாடிக்கையாளர்களை அழைக்க, ‘1600xx’ என்ற தொலைபேசி எண் தொடரை மட்டுமே பயன்படுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நிதி மோசடிகளைத் தடுக்க வங்கிகள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் விளம்பர நோக்கங்களுக்காக ‘140xx’ எண் தொடரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் மோசடிகளும் அதிகரித்துள்ளதால் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம். மோசடி செய்பவர்கள் மொபைல் எண்களை பல வழிகளில் தவறாகப் பயன்படுத்தலாம். எனவே, பரிவர்த்தனைகள் / சேவை அழைப்புகள் ‘1600xx’ எண் தொடரைப் பயன்படுத்தி மட்டுமே செய்ய வேண்டும். ‘140xx’ எண் தொடரைப் பயன்படுத்தி மட்டுமே விளம்பர குரல் அழைப்புகள் மற்றும் SMS அனுப்பப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.