இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்தது. இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் ஹமாஸ் 3 பணயக்கைதிகளின் பெயர்களை வெளியிட்டது.
மேலும் காசா பகுதியில் போர் நிறுத்தம் 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு அமலுக்கு வந்தது. ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 770 பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கு ஈடாக, 33 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னதாக, ஹமாஸ் பணயக்கைதிகளின் பட்டியலை வெளியிடத் தவறியதால் போர் நிறுத்தம் தாமதமானது. பின்னர், 3 பெண் பணயக்கைதிகளின் பெயர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.