சிட்னி: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ரிபாகினா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, உக்ரைனின் டயானா உடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சக நாடடு வீராங்கனை காலின்சை வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.