மலையாள நடிகர் விநாயகனும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியவர். கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இவர் தனது வீட்டின் பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்து அருகில் வசிப்பவர்களை வார்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவரது செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் மீது யாரும் புகார் அளிக்காததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். நடிகர் விநாயகன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். “ஒரு நடிகனாகவும், தனி மனிதனாகவும் என்னால் கையாள முடியாத பல பிரச்சனைகள் உள்ளன. எனது செயலுக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.