தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் 1
காலிஃபிளவர் 1
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன
பூண்டு 4
உப்பு தேவையானவை
மிளகு தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
செய்முறை:
காலிஃபிளவரை வெட்டி சுத்தம் செய்து உப்பு நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். கடாயில் நான்கு டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, முதலில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, அதே கடாயில் மேலும் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய காலிஃபிளவர் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும். மேலும் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சீரகத்தைப் போட்டு, வெந்ததும், துருவிய பூண்டு சேர்த்து, வறுத்த வெங்காயம், காலிஃபிளவர், மிளகுத் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை சேர்க்கவும். நன்றாக கலக்கவும், உங்கள் சுவையான காலிஃபிளவர் ரோஸ்ட் தயார்.