இங்கிலாந்து: எமர்ஜென்சி படத்துக்கு இங்கிலாந்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தியேட்டர்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்து நாடாளுமன்றதில் பேசிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி பாக் பிளாக்மேன் கூறுகையில், ‘‘வடமேற்கு லண்டனில் வால்வர்ஹாம்ப்டன், பர்மிங்காம், ஸ்லாக், ஸ்டெய்னஸ் மற்றும் மான்செஸ்டர் ஞாயிறன்று பொதுமக்கள் நடிகை கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளுக்கு சென்றனர்.
திரைப்படத்தின் இடையே மூகமுடி அணிந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரையரங்கிற்குள் நுழைந்து ரகளை செய்து பார்வையாளர்களை அச்சுறுத்தி உள்ளனர். மேலும் திரைப்படத்தை நிறுத்தும்படி மிரட்டியுள்ளனர். இந்த படம் சர்ச்சைக்குரியது. அதன் தரம் அல்லது உள்ளடக்கம் குறித்து நான் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் எனது தொகுதி மக்கள் மற்றும் பிற தொகுதி மக்கள் அந்த படத்தை பார்த்து முடிவெடுக்கும் உரிமையை நான் பாதுகாக்கிறேன்.
தணிக்கைக்கு பின்னர் திரைக்கு வரும் இதுபோன்ற படங்களை பார்க்க விரும்பும் மக்கள் அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் பார்க்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கு இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்க எடுக்க வேண்டும்” என்றார்.