புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மாவை அவதூறாகப் பேசி சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீஸார் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மஹுவா மொய்த்ரா, எம்.பி., கிருஷ்ணா நகர் தொகுதி, மேற்கு வங்கம். திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த இவர், மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், உ.பி., மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் இறந்த இடத்தை, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா ஆய்வு செய்தார்.
அப்போது, ஒருவர் குடை பிடித்தபடி இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில், மஹுவா மொய்த்ரா, ரேகா சர்மாவை அவதூறாக விமர்சித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையறிந்த மகளிர் ஆணையத் தலைவி மஹுவா மொய்த்ராவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
அவர் பதிலளிக்காததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறையை மேற்கோள் காட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.