சென்னை: சென்னையில் தங்க நகைகளின் விலை நேற்று ஒரு பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.60,880-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அவ்வப்போது ஏற்றமும் இறக்கமும் காணப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. சென்னையில் தங்க நகைகளின் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.60,880-க்கு விற்பனையானது. இதேபோல், 24 காரட் தூய தங்கம் பவுண்டுக்கு ரூ.66,408-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ரூ. 2 உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது.