உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பதற்காக பிரக்யராஜ் வருகைத் தந்துள்ளனர். இந்த மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை 4.8 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர், மேலும் 40 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கும்பமேளாவுக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் பிரச்சனை அதிகரித்துள்ளது. பல நூற்றுக்கணக்கான மக்கள் 30 மணி நேரத்துக்கும் மேலாக நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். மக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவசர உதவிகளுக்காக கோரிக்கைகள் விடுத்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில், பிரக்யராஜ் சென்றபோது, 12 கி.மீ தூரம் நடந்தவர்கள் உள்ளனர். போக்குவரத்து பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இல்லாததால், மக்கள் கடுமையான நிலைமையை சந்திக்கின்றனர்.
பிரக்யராஜ் டிஐஜி அஜய் பால் கூறுகையில், “போக்குவரத்து நெரிசலுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கின்றோம்” என தெரிவித்தார்.