சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியுடன் இந்த ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழகத்தில் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை பல்வேறு குரூப் 1 முதல் குரூப் 8 வரை அதிகாரப்பூர்வ தேர்வுகளை நடத்தி, தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்யப்படுகிறது.
2024ஆம் ஆண்டுக்கான குரூப் 2 பதவிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான காலி இடங்கள் 507 ஆக உள்ளன. குரூப் 2 ஏ பதவிகளுக்கான 1820 காலி இடங்களும், மொத்தம் 2327 இடங்களை நிரப்பும் வகையில் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்தனர். இதில், 5.81 லட்சம் பேர் தேர்வெழுதியனர்.
தேர்வுக்கான விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டு, 29,809 பேர் முதன்மை தேர்வுக்கான தகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் வரும் 8ஆம் தேதி முதல் மொழி, பொது அறிவு மற்றும் மனக்கணக்கு, நுண்ணறிவு தேர்வுகளுக்கான தகுதித்தாள் தேர்வு எழுதுகின்றனர். பிப்ரவரி 23ஆம் தேதி இந்த தேர்வின் விரிவான விடை அளிக்கும் பொது அறிவு தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தற்போது www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யப்படுகிறது.