மும்பை: பொதுவாக தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள் என்று வரும்போது, பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் அதில் கலந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஜெய்மின் மகள் திவா ஷா ஆகியோரின் திருமணத்தில் பிரபலங்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஷா இது குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியது. ஜீத் அதானியின் திருமணத்தைப் பற்றிய வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவின, எலோன் மஸ்க் முதல் கிங் சார்லஸ் வரை அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பிரபலங்களின் கூட்டமாக இருக்கும் என்று கூறப்பட்டது. “எங்கள் குடும்பத்தின் வளர்ச்சியானது சாதாரண தொழிலாளி வர்க்கத்தைப் போன்றது. ஜீத்தின் திருமணம் எளிமையாகவும் பாரம்பரியமாகவும் இருக்கும்” என்று கடந்த மாதம் மகா கும்பமேளாவில் பங்கேற்ற போது கவுதம் அதானி கூறினார்.
இந்நிலையில், ஜீத் அதானி மற்றும் திவா ஷா ஆகியோர் தங்களது திருமண விழாவிற்கு பிரபலங்கள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அழைத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘மித்தி கஃபே’க்கு நேரடியாகச் சென்று அவர்களை திருமணத்திற்கு அழைத்துள்ளனர்.