பொது சிவில் சட்டத்தை உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது. பொது சிவில் சட்டத்தை முதலில் அமல்படுத்திய மாநிலம் உத்தரகாண்ட். இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன் மூலம் திருமணம், சொத்துரிமை, குழந்தைகள் பாதுகாப்பு, விவாகரத்து உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அனைத்து மதங்களும், ஜாதியினரும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். உத்தரகாண்ட் மாநிலத்திற்குப் பிறகு பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் குஜராத் அரசு இறங்கியுள்ளது.
பொது சிவில் சட்டத்தை உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு 45 நாட்களுக்குள் பொது சிவில் சட்டத்தின் வரைவைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து குஜராத் அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.