சென்னை: வெள்ளை பூசணி ஜூஸ் சாப்பிட்டு வருவதால் ஏற்படும் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் காலையில் வெள்ளைப் பூசணியின் சாறுடன் தேனைக் குடித்து வர வயிற்றில் உள்ள புழுக்கள் அகற்றப்படுவதோடு, வயிற்றில் தொற்றுக்கள் ஏற்படாது. வெள்ளைப் பூசணி சாறு தினமும் காலையில் வெறுமனே குடித்துவர உடல் எடை குறையும். இந்த சாற்றில் அதிகளவு நீர்ச்சத்து காணப்படுவதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படும்.
உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் தினமும் வெள்ளைப் பூசணி சாற்றை குடித்து வர உடல் சூடு தணிக்கப்படும். அத்தோடு, உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதோடு, உடல் குளிர்ச்சி அதிகரிக்கும். வெள்ளைப் பூசணி சாறினை தேனுடன் கலந்து ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் குடித்து வர இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால் நோய்த் தொற்றுக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
தினமும் 120ml வெண்பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுதல், சிறுநீருடன் இரத்தம் வெளிவருதல், அல்சரால் இரத்தக்கசிவு ஏற்படுதல், பைல்ஸினால் இரத்தக்கசிவு ஏற்படுதல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைத் தீரும்.
வெண்பூசணி சாறு குடிப்பதன் மூலம் சிறுநீரகங்களைத் தூண்டி இரத்தத்தில் இருக்கக் கூடிய தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுவதோடு குடலில் ஆங்காங்கே ஒட்டி இருக்க கூடிய உணவுக் கழிவுகளை உறிஞ்சி வெளியேற்றும்.
தினமும் வெள்ளைப் பூசணி ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் செரிமான கோளாறுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. வெள்ளைப் பூசணியில் அதிகளவு காரத்தன்மை காணப்படுவதால் வயிற்றில் உள்ள செரிமான அமிலத்தினது ph அளவு கட்டுப்படுத்துவதோடு சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.