திருப்பதி: இந்துக்கள் அல்லாத 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தான போர்டு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எதற்காக தெரியுங்களா?
பதவி ஏற்றபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறி, இந்து அல்லாத மத நடவடிக்கைகளை பின்பற்றியதால் 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தான போர்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருப்பதி உள்ளிட்ட எந்த கோவிலுடன் தொடர்பில்லாத பதவிகளுக்கு இடமாற்ற செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலைக்கு சேர்ந்த இந்துக்கள் அல்லாத 18 ஊழியர்கள், இந்துக்களின் நம்பிக்கையை பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்றிருந்தனர். தற்போது அந்த உறுதிமொழியை அவர்கள் பின்பற்றவில்லை. இதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான போர்டின் நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
கோவில்களின் ஆன்மீக புனிதத்தன்மை மற்றும் மத நடவடிக்கைகளைப் பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்து மத கண்காட்சிகள், திருவிழாக்கள், நிகழ்ச்சியின்போது இந்து மதம் அல்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
18 ஊழியர்களின் தற்போதைய பணியிடங்களைச் சரிபார்த்து, அவர்கள் திருமலையிலோ அல்லது வேறு எந்தக் கோவிலிலோ அல்லது மத நிகழ்ச்சி தொடர்பான பணியிலோ அல்லது பதவியிலோ பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் பணியை தேவஸ்தான் போர்டின் இரண்டு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தேவஸ்தான போர்டு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.