சென்னை: கைதி 2 படத்தில் ஏஜென்ட் விக்ரம் ஆகிய கமல் ஹாசன் என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல்கள் ெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் என்கிற கான்சப்ட்-ஐ கொண்டு வந்து, அதற்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
ஹாலிவுட்டில், மார்வல் – டி.சி படங்களுக்கு எப்படி யூனிவெர்ஸ் இருக்கிறதோ, அதே போல் விக்ரம், லியோ, கைதி படங்களை வைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கியுள்ளார்.
இந்த யூனிவெர்சில் கடைசியாக லியோ படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக கைதி 2 படம் உருவாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். கூலி படத்தை முடித்த கையோடு கைதி 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார் லோகேஷ்.
இந்நிலையில், கைதி 2 படத்தில் ஏஜென்ட் விக்ரம் ஆகிய கமல் ஹாசன் என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குறித்து கமல் ஹாசனிடம் லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஓகே ொல்லிவிட்டாராம். தேதி முடிவு செய்து சொல்லுங்கள், வந்துவிடுகிறேன் என கமல் கூறினாராம். இதன்மூலம், கைதி 2-வில் ஏஜென்ட் விக்ரமாக கமல் என்ட்ரி கொடுக்கப்போவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.