திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வருபவர் துசேந்திரன் (38) இதே முகாமில் இவரதுபக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் ரஞ்சித் குமார் (43) தினேஷ் ( 20) சதீஷ் மற்றும் விக்னேஷ் (24). இவர்களுக்கும் துசேந்திரனுக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று துசேந்திரன் மாடி படிக்கட்டில் ஏறும் பொழுது ரஞ்சித் குமார் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். பின்னர் அதுவே கைகலப்பாக ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் குமார் மரக்கட்டையை எடுத்து துசேந்திரனை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த சம்பவத்தில் துசேந்திரன் பலத்த காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து துசேந்திரன் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்துள்ளனர். தினேஷ், சதீஷ் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற ஜாமீனில் விடுவித்தனர். சதீஷை தேடி வருகின்றனர்.