தேவையான பொருட்கள் :
புளி – அரை கப்.
சீரகம் – 1 ஸ்பூன்.
பூண்டு – 10 பல்.
காய்ந்த மிளகாய் – 6.
இஞ்சி (நறுக்கியது) – 2 ஸ்பூன்.
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்.
எண்ணெய் – தேவையான அளவு.
கறிவேப்பிலை – சிறிது.
வர மிளகாய் தூள் – ½ ஸ்பூன்.
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.
வெள்ளம் – சிறிய துண்டு.
உப்பு – சிறிது.
செய்முறை :
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது, அதை தனியாக எடுத்து வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1.1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி புளி சேர்த்து 2 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்.
இதையடுத்து, அடுப்பை அனைத்து புளி கரைசல் நன்கு ஆறியதும், மிக்சி ஜாரில் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். அதே சமயம் வறுத்து வைத்த பூண்டு, காய்ந்த மிளகாய் கலவையையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, சீரகம், பெருங்காயப்பொடி சேர்த்து தாளிக்கவும்.
தொடர்ந்து அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் தயார் செய்து வைத்த புளி கரைசல் மற்றும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். குழம்பு கொதித்தவுடன் அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். குழம்பில் இருக்கும் எண்ணெய் தனியாக பிரிந்து வரும் நிலையில், சிறிது வெள்ளம் சேர்த்து இறக்கினால், சுவையான புளிக்குழம்பு தயார்.