ஆக்ரா: பயிற்சியின்போது பாராசூட் திறக்காமல் விழுந்ததில் இந்திய விமானப்படை வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகாவை சேர்ந்த ராணுவ வீரர் மஞ்சுநாத், ஆக்ராவில் பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மஞ்சுநாத்தின் பாராசூட் திறக்கவில்லை. இதனால், அவர் நடுவானில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விரைந்து செயல்பட்டு மஞ்சுநாத்தை மீட்ட சக வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.