பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. ஆனால் சில பழங்களை இரவில் சாப்பிடுவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம். நிபுணர்கள் கூறுவதன்படி, இரவில் உணவில் சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்க வேண்டும். வாழைப்பழம் உடலில் மெலடோனின் ஹார்மோனை அதிகரிக்கச் செய்து தூக்கத்தைக் குழப்பும்.

இது வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தர்பூசணியில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். ஆனால் இரவில் சாப்பிட்டால் அஜீரண கோளாறு மற்றும் வாயுவை அதிகரிக்கலாம். திராட்சையில் உள்ள அதிகளவு சர்க்கரை செரிமான அமைப்பில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
இரவில் ஆரஞ்சு பழம் உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து அமிலத்தன்மை மற்றும் வயிற்று பிரச்சனைகளை உருவாக்கும். வெள்ளரிக்காயில் அதிக நீர் இருப்பதால் இரவில் சாப்பிட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். மாம்பழம் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். இரவில் அதிகமாக சாப்பிட்டால் வயிறு கனமாகும் மற்றும் தூக்கத்துக்கு இடையூறு ஏற்படும். எனவே, இந்த பழங்களை பகலில் மட்டுமே சாப்பிடுவது நல்லது.