விழுப்புரம்: அதிமுக தேர்தலில் தோல்வி பயத்தினால் போட்டியிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுகவை பார்த்து பயம். அதோடு மக்களை பார்த்தும் பயப்படுகிறார் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக உள்ள கட்சிகள் போட்டியிடவில்லை.
அதன் பிறகு மொத்தம் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் திமுக, நாதக மற்றும் பாமக இடையே போட்டி நிலவுகிறது. அதன் பிறகு இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைவதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தும்பூர் கிராமத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். நம்முடைய பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் தோல்வி பயத்தினால் போட்டியிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுகவை பார்த்து பயம். அதோடு மக்களை பார்த்தும் பயப்படுகிறார். அதனால்தான் தேர்தலையே அவர் புறக்கணித்து விட்டார். அவருக்கு பாஜகவை பார்த்தாலும் பயம்தான். அதனால்தான் அவர்களுக்கு வழிவிட்டும் தேர்தலை புறக்கணித்துள்ளார். மேலும் வருகின்ற இடைத்தேர்தலில் அன்னியூர் சிவாவுக்கு வாக்களித்து 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார்.