கேரளா: கோழிக்கோட்டில் கோயில் விழாவில் யானைகள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 2 பெண்கள் பலியாகி உள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மனங்குளங்கரா கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஆண் யானைகள் பரிவட்டம் கட்டி வந்தன.
அப்போது திடீரென 2 யானைகள் பயங்கரமாக சண்டையிட்டன. இந்த மோதலில் அங்குள்ள கோயில் அலுவலகக் கட்டடம் இடிந்து விழுந்ததில், அதற்கு கீழ் இருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்து ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கேரள மக்கள் மத்தியில் பெரும அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.