சென்னை: தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு, 9- 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்குகிறது.
இதில் தமிழகத்தில் மட்டும் 6,695 பேருக்கு உதவித் தொகை அளிக்கப்படும். இதற்காக 8ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் 22ஆம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று dge.tn.gov.in-இல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது..