புதுடில்லி: இன்று வடஇந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பாதுகாப்புடன் இருங்கள் என்று மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ் செய்துள்ளார்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் ஷாக்காகி உள்ளனர். வீதிகளில் தஞ்சமடைந்தவர்கள் மீண்டும் வீடுகளுக்குள் செல்வதா வேண்டாமா என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தச் சூழலில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.