புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் கூடிய தேர்வு குழு கூட்டத்தில் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டார் இன்றைய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை கூடிய தேர்வுக்குழு, புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நடத்திய கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இறுதி செய்யப்பட்டவரின் பெயர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இன்றே முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.