சென்னை : வேகமாக இன்ப்ளுயன்ஸா வைரஸ் பரவுவதால் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்ப்ளுயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த வைரஸ், இருமல், தொண்டை ஒவ்வாமை, காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பாதிப்புகளுடன் வருவோருக்கு அலட்சியம் காட்டாமல், இன்ப்ளுயன்ஸா டெஸ்ட் செய்யவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.