துபாய்: இன்று வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்திய அணி வெற்றிக் கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 41 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் 32 போட்டிகளில் இந்தியாவும், 8 போட்டிகளில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் கைவிடப்பட்டது. வங்கதேசத்தை இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.