சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.,வினர் 45 பேர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் கற்பிக்கின்றனர். கல்விக்காக 20 பாடங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதில் ஒன்று பிஎம்எஸ்ரீ பள்ளி நிதி. இந்த ஒரு திட்டத்துக்கான நிதியை நிறுத்திவிட்டார்கள். உங்கள் (திமுக) குழந்தைகள் ஹிந்தி படிக்கும்போது, அரசுப் பள்ளிக் குழந்தைகள் ஹிந்தி படிக்கக் கூடாதா? உதயநிதி பிரதமரை தன் இஷ்டத்துக்கு பேசுவாரா?
நாம் மனது வைத்தால் திமுக அரசை தூக்கி எறியலாம். உதயநிதி மரியாதையுடன் பேச வேண்டும். 2026-க்குப் பிறகு, அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. 1965-ல் நடந்தது இப்போதும் நடக்கும் என்கிறார்கள். 1965-ல் திமுக தலைவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தவில்லை. அவர்களின் குழந்தைகளும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கவில்லை. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. மும்மொழி முறையை அமல்படுத்தக் கோரி சிறுபான்மைக் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 2001-ல் மத்திய அரசின் பாடத்திட்டமாக இருந்தாலும் தமிழ் பாடமாக இருக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தேன். திராவிடர் ஆட்சியில் தமிழர்களுக்கு தமிழ் எழுதத் தெரியாது. விஜய் மற்றும் திருமாவளவன் ஆகியோர் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.